பழநி மலைக்கோயிலில் உண்டியல் வசூல் ரூ.1.86 கோடி

பழநி: பழநி மலைக்கோயிலில் நடந்த உண்டியல் காணிக்கையில் ரொக்கமாக ரூ.1.86 கோடி கிடைத்தது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கும்பாபிஷேகத்திற்கு பிறகான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மலைக்கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் நேற்று துவங்கியது.

வங்கி ஊழியர்கள், கோயில் ஊழியர்கள், கல்லூரி மாணவ- மாணவிகள், தன்னார்வலர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் ரொக்க பணமாக ரூ.1 கோடியே 86 லட்சத்து 10 ஆயிரத்து 381 கிடைத்தது. தங்கம் 372 கிராம், வெள்ளி 8 ஆயிரத்து 807 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 324 கிடைத்தன. உண்டியல் எண்ணும் பணியை பழநி கோயில் இணை tஆணையர் நடராஜன் தலைமையிலான அதிகாரிகள் மேற்பார்வையிட்டனர். தொடர்ந்து இன்றும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறுகிறது.

Related Stories: