தமிழ்த்தாய் வாழ்த்து பாடல், தேசியகீதத்துக்கு மதிப்பளிக்காதவர்கள் மீது நடவடிக்கை: சரத்குமார் வலியுறுத்தல்

சென்னை: சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டம், பொம்மைக்குட்டி மேட்டில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் உதவி காவல் ஆய்வாளர் தேசிய கீதத்திற்கு மதிப்பளிக்காமல் அமர்ந்திருந்து அலைபேசியில் பேசிக்கொண்டிருந்ததும், இது போன்று பிற மாவட்டங்களில் சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள், மாணவர்கள் தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்தின் போது அவமரியாதை செய்ததாக வெளிவரும் செய்திகள் மிகுந்த வேதனையளிக்கிறது.

மேலும், மழைநீர் வடிக் குழாயில் தேசியக்கொடி ஏற்றுவது என்பது பெருத்த அவமானம் என்பது கூட அந்தப்பள்ளி நிர்வாகத்திற்கும் ஆசிரியர்களுக்கும் தெரியவில்லையா. பள்ளிகளில் தேசியக்கொடி ஏற்றுவதற்கு ஒரு கம்பம் அமைப்பதற்கு கூட வழியில்லாத நிலை வேதனையளிக்கிறது. மேலும், மரியாதை செலுத்த தவறுபவர்கள் யாராக இருந்தாலும், தேசியக் கொடியை கொடிக்கம்பம் தவிர்த்து பிற இடங்களில் ஏற்றி அவமரியாதை செய்பவர்களாக இருந்தாலும், பாரபட்சமின்றி சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: