ஈரோட்டில் அண்ணன், தம்பி கொலையில் தாய்மாமன் உள்பட 2 பேர் கைது

ஈரோடு: ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகி மற்றும் அவரது சகோதரர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவர்களது தாய்மாமன் உள்ளிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். ஈரோடுமுனிசிபல் காலனியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி ஈரோடு கிழக்கு தொகுதி பொருளாளர் கார்த்திக் மற்றும் அவருடைய சகோதரர் கெளதம் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டனர்.

அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த இரட்டை கொலையில் வழக்கு பதிவு செய்து ஈரோடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் கொலைசெய்யப்பட்ட இரண்டு இளைஞர்களின் தாய்மாமன் ஆறுமுகசாமி மற்றும் உறவினர் கவின் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். பணம் கொடுக்கல், வாங்கல் மற்றும் சொத்து பிரச்சனையில் இந்த கொலை நடந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

 சம்பவம் நடந்த அன்று இளைஞர்களின் வீட்டுக்கு சென்று ஆறுமுகசாமி மற்றும் கவின் ஆகியோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட தகராறில் கார்த்திக் மற்றும் கெளதமை கத்தியால் குத்தி ஆறுமுகசாமி கொலை செய்தார் என்று கூறப்படுகிறது. உடன் சென்ற கவினிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

Related Stories: