ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குறித்து இன்று மாலை அறிவிப்பு

சென்னை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தங்கள் தரப்பு வேட்பாளரை இன்று மாலை ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்கவுள்ளதாக வைத்தியலிங்கம் அறிவித்துள்ளார். சென்னையில் ஆலோசனை கூட்டத்துக்கு பின் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த வைத்தியலிங்கம் அளித்த  பேட்டியில்; பழனிச்சாமி தரப்பில் காலை வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் மாலை தங்கள் வேட்பாளரை பன்னீர்செல்வம் அறிவிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா மறைவை அடுத்து அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. பல்வேறு கட்சினரும், சுயேட்சை வேட்பாளர்களும் போட்டி போட்டு வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக தனது நிலைப்பாட்டை அறிவிக்காததாலும், இரட்டை இலை சின்னம் பிரச்சனையாலும் அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணியினர் தங்கள் தரப்பு வேட்பாளரை அறிவிக்காமல் இருந்தனர். நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்கியதை அடுத்து இன்று காலை ஈபிஎஸ் அணியினர் தங்கள் தரப்பு  வேட்பாளராக ஈரோடு கிழக்கு தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளருமான கே.எஸ்.தென்னரசுவை வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இன்று மாலை வேட்பாளரை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: