old polluted மாற்றம் என்று கூறுவதற்கு பதில் old political மாற்றம் என்று நிதியமைச்சர் கூறியதால் நாடாளுமன்றத்தில் சிரிப்பலை

டெல்லி: 2023-24-ம் நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த ஆண்டும் நாடாளுமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பழைய மாசடைந்த வாகனம் என்பதை மாற்ற old polluted மாற்றம் என்று கூறுவதற்கு பதில் old political மாற்றம் என்று நிர்மலா சீதாராமன் கூறினார். old political மாற்றம் என்பது அரசியல் மாற்றத்தை குறிக்கும் என்பதால் நாடாளுமன்றதில் சிரிப்பலை

ஒன்றிய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிதாவது:

* பான் கார்டை அடையாள ஆவணமாக்க ஒன்றிய அரசு திட்டம்

* பசுமை ஹைட்ரஜன் தயாரிக்கும் திட்டம் ரூ.19,700 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

* புதுப்பிக்கப்பட்டஎரிசக்தி உற்பத்திக்கு ரூ.20,700 கோடி ஒதுக்கீடு, அதில் ஒன்றிய அரசின் பங்கு ரூ.8,003 கோடி

* ரசாயன உரங்களுக்கு மாரராக நுண்ணுயிர் உரங்களை பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும், அடுத்த 3 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகள் இயற்க்கை விவசாயத்துக்கு மாறுவதற்கான திட்டங்கள், கடலோர பகுதிகளில் மாங்குரோவ் காடுகள் வளர்ப்பு திட்டத்துக்கு நிதிஒதுக்கப்படும்.

* பயோ மின் உற்பத்தி திட்டத்துக்கான கட்டமைப்புகளை உருவாக்க ரூ.10,000 கோடி ஒதுக்கீடு

* நாடு முழுவதும் 63,000 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் ரூ.2,516 கோடியில் கணினிமயமாக்கப்படும்.

* புதிதாக கூட்டுறவு சங்கம், மீனவ கூட்டுறவு சங்கம், பால்வள கூட்டுறவு சங்கம் தொடங்க முன்னுரிமை அளிக்கப்படும்.

* தேசிய தகவல் நிர்வாகக் கொள்கை உருவாக்கப்படும்

* கடலோர பகுதிகளை இணைக்கும் வகையில் படகு போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படும்

* காலாவதியான பழைய வாகனங்களை பயன்பாட்டில் இருந்து அகற்ற நிதி ஒதுக்கப்படும்

* சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களில் ஆவணங்களை பாதுகாக்க டிஜிட்டல் இ-லாக்கர் வசதி அறிமுகப்படுத்தப்படும்

* இளைஞர்களின் திறன்களை மேம்படுத்த புதிதாக 30 திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்

* உள்நாட்டில் சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும்

* உள்நாட்டில் தயாரிக்கும் பொருட்களை விற்பதற்கு ஒற்றுமை அங்காடிகளை மாநிலங்கள் அமைபப்து ஊக்குவிக்கப்படும்

* மாநிலத்தின் சிறப்பு கைவினைப் பொருட்கள், புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள், ஒரு மாவட்டம் ஒரு பொருள் விற்கப்படும்

* அடமானப் பத்திரம் ஏதுமின்றி ரூ.2 லட்சம் கோடி வரை தொழில் முனைவோர் கடன் பெற முடியும்

* ரூ.10,000 கோடி முதலீட்டில் பசு மற்றும் அது சார்ந்த பொருளாதாரங்களை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்

* சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் தரும் வகையில் ரூ.9,000 கோடி ஒதுக்கப்படும்

Related Stories: