வலங்கைமான் : வலங்கைமான் மற்றும் ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் வேளாண்மைத்துறையின் சார்பில் நெல் சாகுபடிக்கு பிறகு பயறு வகை பயிர் சாகுபடி செய்ய வலியுறுத்தி வேளாண் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன் ஆலோசனை யின் பேரில் வலங்கைமான் ஆலங்குடி மற்றும் அரிதுவாரமங்கலம் ஆகிய கிராமங்களில் நெல் சாகுபடிக்கு பிறகு பயறு வகை பயிர் சாகுபடி செய்ய வலியுறுத்தி வேளாண் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்வின்போது கலை குழுவினர் பயிர் வகை சாகுபடி பற்றிகரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
