பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் டெல்லியில் குடியரசுத் தலைவரை சந்தித்தார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: இன்று காலை 11 மணிக்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். பிரதமர் மோடி தலைமையில் காலை 10 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் எனவும் நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கரத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தார். குடியரசுத் தலைவருடனான சந்திப்புக்கு பிறகு நிதியமைச்சர் ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்று பட்ஜெட் 2023-24க்கு ஒப்புதல் பெறுவார். இன்று பட்ஜெட் தாக்கலாகும் நிலையில் நிதித்துறையின் முக்கிய அதிகாரிகளும் குடியரசு தலைவருடன் சந்திப்பு மேற்கொண்டனர்.

இன்று 5வது முறையாக ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை மக்களவையில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய கடைசி முழு பட்ஜெட் என்பதால் சலுகைகள் பற்றி அறிவிக்க அதிக வாய்ப்புள்ளது.

Related Stories: