தமிழ்நாட்டில் குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் திரிகோணமலைக்கு 180 கி.மீ. தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது எனவும் வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக் கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் மேற்கு - தென்மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நாளை, நாளை மறுநாள் இலங்கை, தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பிப்.3, 4ல் சூறாவளி வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: