சொல்லிட்டாங்க...

* ஏழைகள், தலித்துகள் கனவு காணவும், ஆசைகளை நிறைவேற்றவும் ஒன்றிய அரசு தைரியத்தை அளித்துள்ளது. ஜனாதிபதி திரவுபதி முர்மு

* ஊழலை ஒழித்துவிட்டதாக அரசு கூறுகிறது, ஆனால் ஒரு நபர் எப்படி வங்கிகளில் ரூ.1 லட்சம் கோடியை ஏமாற்ற முடியும். காங்கிரஸ் தலைவர் கார்கே

* ஆந்திராவின் தலைநகராக விசாகப்பட்டினம் விரைவில் செயல்பட தொடங்கும். அதன் பிறகு எனது முகாம் அலுவலகத்தை அங்கே மாற்றி சென்று விடுவேன். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

* விலைவாசி கட்டுப்படுத்துதல், மத நல்லிணக்கத்தை மேம்படுத்துதல், மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றுதல் பற்றி ஒரு வரி கூட ஜனாதிபதி உரையில் இல்லை. திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரைன்

Related Stories: