ஜனாதிபதியின் உரைக்கு ஏ.சி.சண்முகம் பாராட்டு

சென்னை: ஜனாதிபதியின் உரை குறித்து புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவின் ஜனாதிபதியாக பதிவியேற்றபின் முதல்முறையாக, இவ்வாண்டு முதல் நாடாளுமன்ற, ராஜ்ய சபாவின் கூட்டு கூட்டத்தில் திரவுபதி முர்மு சிறப்புரையாற்றினார். தனது உரையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இதுவரையில் செயல்படுத்தியுள்ள பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். 2047ம் ஆண்டுக்குள் புதிய இந்தியா உருவாக்கப்படும், ஏழ்மையற்ற நாடு, நவீன கட்டமைப்பை நோக்கி நகர்தல், அனைவருக்குமான வளர்ச்சி, ஏழ்மை ஒழிப்பு வார்த்தையாக இல்லாமல் செயல்படுத்தப்படுதல், பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5ம் இடம், விவசாயிகள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் என்று மோடி அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பாராட்டி உரைத்தார். பிரதமர் மோடி தலைமையிலான அரசின் அனைத்து திட்டங்களும் நவீனத்துவத்தின் மூலம் மக்களை அணுகுவதால் அவை நாட்டின் கடைகோடி மக்களையும் சென்றடைவது மக்களாட்சியின் மகத்துவத்தை உணர்த்துகிறது. ஜனாதிபதியின்இந்த சிறப்புமிக்க உரையை வாழ்த்தி வரவேற்கிறேன்.

Related Stories: