இபிஎஸ் அணி வேட்பாளர் இன்று அறிவிப்பு?

ஈரோடு கிருஷ்ணம்பாளையத்தில் கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி அதிமுக இபிஎஸ் அணி ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பின், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் அளித்த பேட்டியில், ‘தர்மத்தை காப்பாற்ற குருசேத்திர யுத்தத்தில் கிருஷ்ணபரமாத்மா எப்படி தனது வியூகத்தை வகுத்தாரோ, அதேபோல எடப்பாடி வியூகத்தை வகுப்பார். இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்பதை பொறுத்து இருந்து பாருங்கள், மகிழ்ச்சியான தகவலை காணலாம். வேட்பாளர் அறிவிப்பில் குழப்பமே கிடையாது. இன்று காலை தேர்தல் பணிமனைகள் திறக்கப்படும். அதற்கு பிறகு மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது’ என்று கூறினார். வேட்பாளர் அறிவிப்பைதான் செங்கோட்டையன் மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது என கூறியதாக தெரிகிறது. எனவே வேட்பாளர் அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்று இபிஎஸ் அணியினர் எதிர்பார்த்துள்ளனர்.

Related Stories: