இடைத்தேர்தலில் போட்டியா? அதிமுகவுக்கு ஆதரவா?.. முடிவெடுக்க முடியாமல் திணறும் பாஜக

சென்னை: ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவின் இரண்டு அணிகளும் பாஜகவின் ஆதரவை கோரியுள்ளன. அதிமுகவின் எந்த அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்பது இதுவரை உறுதியாகாததால் முடிவு எடுக்க முடியாமல் பாஜக தவித்து வருகிறது. இரட்டை இலையை வைத்திருக்கும் அதிமுக அணியை மட்டுமே ஆதரிக்க பாஜக திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக போட்டியிடும் என்று கூறிய நிலையிலும் பாஜக போட்டியிட வேண்டும் என்று இன்றைய கூட்டத்திலும் பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். கூட்டணியில் பெரிய கட்சியான அதிமுகவே இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று அண்ணாமலை ஏற்கனவே கூறியிருந்தார்.

Related Stories: