நாளை தாக்கலாகும் பட்ஜெட் நாட்டின் வளர்ச்சியை எடுத்துக்காட்டும் பட்ஜெட்டாக அமையும்: நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேட்டி

டெல்லி:. பழங்குடியினத்தை சேர்ந்த ஒரு பெண்மணி குடியரசு தலைவர் உரையை நிகழ்த்துவது நாட்டுக்கே பெரும. நாளை தாக்கலாகும் பட்ஜெட் நாட்டின் வளர்ச்சியை எடுத்துக்காட்டும் பட்ஜெட்டாக அமையும். மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேட்டி அளித்தார்.

அந்த பேட்டியில் பிரதமர் மோடி கூறியதாவது:

நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் தனது முதல் உரையை நிகழ்த்தும் மிக முக்கியமான நாள்இன்று. பழங்குடியினத்தை சேர்ந்த ஒரு பெண்மணி குடியரசு தலைவர் உரையை நிகழ்த்துவது நாட்டுக்கே பெருமை. குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது மிகப்பெரிய கவுரவம் என பிரதமர் மோடி கூறினார்.

எதிர்க்கட்சிகளின் குரலை நாங்கள் மதிக்கிறோம். நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் அனைவரும் பேச உரிய நேரம் அளிக்கப்படுகிறது என பிரதமர் கூறினார். அவை நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டார்.

நாட்டின் வளர்ச்சியை எடுத்துக்காட்டும் பட்ஜெட்டாக நடப்பு பட்ஜெட் இருக்கும். மத்திய பட்ஜெட்டை  ஒரு பெண் அமைச்சர் தாக்கல் செய்யவுள்ளதை உலகமே உற்று நோக்கவுள்ளது என பிரதமர் தெரிவித்தார்.

அனைத்து தரப்பு மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் பட்ஜெட் அமையவுள்ளது. நாட்டுக்கும் அதன் குடிமக்களுக்கும் முன்னுரிமை அளிப்பதே மத்திய அரசின் நோக்கம் என பிரதமர் கூறினார்.

Related Stories: