நிலக்கரி வரிவிதிப்பில் முறைகேடு சட்டீஸ்கர் முதல்வர் அலுவலக அதிகாரியின் ரூ.17.48 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அறிவிப்பு

புதுடெல்லி: நிலக்கரி வரிவிதிப்பில் உள்ள முறைகேடு தொடர்பாக சட்டீஸ்கா் முதல்வரின் துணை செயலாளர் சவுமியா, நிலக்கரி வியாபாரி திவாரியின் ரூ.17.48 கோடி பினாமி சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தில் நிலக்கரி வரிவிதிப்பில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான விசாரணையில்  மூத்த அதிகாரிகள், தொழிலதிபர்கள்,  அரசியல்வாதிகள் மற்றும் இடைத்தரகர்கள் அடங்கிய பெரிய குழுவினர் இந்த முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் சட்டீஸ்கர் முதல்வரின் துணை செயலாளர் சவுமியா, நிலக்கரி வியாபாரி சூர்யகாந்த் திவாரி உள்ளிட்ட 9 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

தற்போது முதல்வர் அலுவலகத்தின் துணைச் செயலாளரான சவுமியா, நிலக்கரி வியாபாரி சூர்யகாந்த் திவாரி ஆகியோரின் ரூ.17.48 கோடி மதிப்புள்ள பினாமி சொத்துகளை பறிமுதல் செய்துள்ளதாக நேற்று அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. இந்த வழக்கில்  தற்காலிகமாக இணைக்கப்பட்ட51 சொத்துக்களில், ரூ.7.57 கோடி மதிப்புள்ள 8 பினாமி சொத்துகள் சவுமியா ஆதாயம் பெற்ற வகையில் சொந்தமானவை என்றும், மீதமுள்ள 43 திவாரியின்  கட்டுப்பாட்டில் இருப்பதாகவும்   தெரிவித்துள்ளது. இதன்மூலம் இந்த வழக்கில் இணைக்கப்பட்ட சொத்துகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.170 கோடியாக உள்ளது.

Related Stories: