பா.ஜவிடம் இருந்து நாட்டை மீட்க வேண்டும்: தலைவர்கள் பேச்சு

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில்,‘வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் போன்ற பிரச்சனைகளில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நாட்டை ஒருங்கிணைக்க முடியும் என்பதை ராகுல் காந்தி நிரூபித்துள்ளார்.  ஆனால் பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ், பாஜ ஆகியவை நாட்டில் ஏழை-பணக்காரர் பிரிவினையை விரிவுபடுத்தும் கொள்கையை பின்பற்றுகின்றன. மோடி , ஆர்எஸ்எஸ், பாஜ  ஆகியவை ஏழை மக்களை ஏழைகளாகவும், பணக்காரர்களை, பணக்காரர்களாகவும் மாற்ற விரும்புகின்றன. பத்து சதவீத மக்கள் நாட்டின் 72 சதவீத செல்வத்தை சூறையாடுகிறார்கள். 50 சதவீதம் பேர் வெறும் 3 சதவீதத்தை மட்டுமே வைத்திருக்கிறார்கள்’ என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி ராஜா பேசும்போது,’ நாட்டில்  உள்ள அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். நாட்டின்  சுதந்திரத்திற்காக அனைவரும் ஒன்று கூடி போராடி ஆங்கிலேயர் பிடியில் இருந்து  நாட்டை விடுவித்தோம். இன்று  அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் ஒன்று கூடி  பா.ஜ ஆட்சியில் இருந்து நாட்டை மீட்க வேண்டும்’ என்றார். ஜம்மு  காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா பேசுகையில், ‘நாட்டின் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி மற்றொரு  யாத்திரை  ராகுல்காந்தி மேற்கொள்ள வேண்டும்.

இந்த யாத்திரையின் கடைசி  விழாவில், நான், என் தந்தை மற்றும் எனது கட்சியின் சார்பாக ராகுல்  காந்திக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த யாத்திரை  வெற்றிகரமாக நடந்து முடிந்து உள்ளது. இந்த யாத்திரை நாட்டில் பாஜவை  விரும்புபவர்கள் மட்டும் அல்ல மாற்று எண்ணம் கொண்ட சகோதரர்களும்  இருக்கிறார்கள் என்பதை காட்டியுள்ளது. இந்த நேரத்தில் ராகுல் காந்தியை  மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி யாத்திரை மேற்கொள்ளுமாறு கேட்டுக்  கொள்கிறேன். அந்த பயணத்தில் அவருடன் நடக்க விரும்புகிறேன்’ என்று  பேசினார்.  

பிடிபி தலைவர் மெகபூபா முப்தி கூறுகையில், ‘ ராகுல் காந்தி  வழியாக நாடு நம்பிக்கையின் கதிர்களை காண்கிறது’ என்றார். புரட்சிகர  சோசலிஸ்ட் கட்சி தலைவர் பிரேம்சந்திரன் பேசுகையில்,’ ராகுல்காந்தியுடன்  எங்கள் கட்சி தொடர்ந்து இணைந்து இருக்கும்.  இப்போது ராகுல் மூலம் ஒரு  வரலாற்று இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. இந்த யாத்திரை மூலம் நாட்டை  பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக போராட ராகுல் காந்தி தான் சரியான  தலைவர் என்பதை அவர் நிரூபித்துள்ளார்’ என்று அவர் கூறினார்.

Related Stories: