திண்டுக்கல் அருகே மறவபட்டி பகுதியில் கோழிக்கொண்டை பூ அமோக விளைச்சல்

திண்டுக்கல் :  திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள வெள்ளோடு, சிறுநாயகன்பட்டி, கள்ளிப்பட்டி, உலகம்பட்டி, மறவபட்டி, கலிக்கம்பட்டி, பெருமாள் கோவில்பட்டி, சின்னாளபட்டி, செம்பட்டி, சிலுவத்தூர், அதிகாரிப்பட்டி உட்பட பல ஊர்களில் விவசாயிகள் பூக்கள் சாகுபடி செய்கின்றனர். குறிப்பாக முகூர்த்த நாட்களை வைத்து மலர் சாகுபடியை விவசாயிகள் திட்டமிடுகின்றனர். மேலும் மல்லி, செண்டுமல்லி, செவ்வந்தியுடன் கோழிக் கொண்டையும் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. கோழிக்கொண்டை மலர்கள் மூன்று மாதத்தில் அறுவடை செய்யப்படும் குறுகிய கால பயிர் என்பதால் ஓரளவு தண்ணீர் வசதி உள்ள விவசாயிகள் சாகுபடிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

 மேலும் தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதால் நல்ல விலை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் விவசாயிகள் உள்ளனர். இது பற்றி விவசாயி வேளாங்கண்ணி கூறுகையில்‌, ‘‘அனைத்து வகையான மலர்களுக்கும் ஆண்டு முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. மல்லிகை முல்லை ஆகியவைகள் பனிக்காலங்களில் அதிக அளவு பாதிக்கப்படுகின்றது. ஆனால் சம்பங்கி மற்றும் கோழிக்கொண்டை சாகுபடியில் 15 நாட்கள் வயது உள்ள நாற்றுக்கள் நடவு செய்து 35வது நாட்களில் இருந்து பூக்கள் அறுவடை செய்யப்படுகிறது. தற்போது கோழிக்கொண்டை பூக்கள் 40 முதல் 60 வரை நிற்கின்றது முகூர்த்த காலங்களில் 80 முதல் 100 வரை விற்கும்’’ என்றார்.

Related Stories: