ஜி20 மாநாடு கருத்தரங்கு புதுச்சேரியில் தொடங்கியது: 11 நாடுகளைச் சேர்ந்த 15 பிரதிநிதிகள் பங்கேற்பு..!!

புதுச்சேரி: ஜி20 நாடுகளை சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்கும் அறிவியல் மாநாடு புதுச்சேரியில் தொடங்கியது. இந்தியா தலைமை ஏற்றுள்ள ஜி20 மாநாட்டிற்கான கருத்தரங்கம் புதுச்சேரியில் தொடங்கி நடந்து வருகிறது. நாடு முழுவதும் 200 நகரங்களில் ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 11 நாடுகளைச் சேர்ந்த 15 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், இந்தியா, கொரியா, ரஷ்யா, கனடா பங்கேற்றுள்ளன. இந்தியா, கடந்தாண்டு மாநாடு நடத்திய இந்தோனேஷியா, அடுத்தாண்டு நடத்த உள்ள பிரேசில் தலைமை உரையாற்றுகிறது.

தேசிய அகாடமி தலைவர் அசுதோஷ் தலைமையில் நடக்கும் கருத்தரங்கில் வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டையொட்டி வெளிநாட்டுப் பிரதிநிதிகள் தங்கும் விடுதிகள், விமான நிலையம்,மாநாட்டு அரங்கம் ஆகியவை அமைந்துள்ள பகுதிகளைச் சுற்றிலும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த இடங்கள் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. மாநாடு நடைபெறும் விடுதியின் முன்பகுதியில் புதுவையின் அடையாளமான ஆயி கட்டிடவடிவமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 10 அடி உயரத்தில் ஆயி மண்டபம், பிரதமர் உருவ மணல் சிற்பமும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், புதுச்சேரி நகரம் பொலிவுபடுத்தப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது. புதுச்சேரியைத் தொடர்ந்து, அகர்தலா, பங்காரம் தீவு, போபால் ஆகிய இடங்களில் அறிவியல் 20 கூட்டம் நடைபெறுகிறது. இறுதிக் கூட்டம் கோவையில் நடைபெறுகிறது. அறிவியல் 20 கூட்டத்தில் இந்தியாவில் உள்ள 42 அறிவியல் நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

Related Stories: