புதுவையில் இன்று ஜி20 மாநாடு துவக்கம்: 75 வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்பு

புதுச்சேரி: புதுவையில் இன்று ஜி 20 மாநாடு துவங்குகிறது. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப  அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி என்ற  தலைப்பில் ஜி 20 மாநாடு புதுச்சேரி மரப்பாலம் சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் இன்று துவங்குகிறது.   மாநாட்டில், ஜி 20 நாடுகள் மற்றும் நட்பு நாடுகளின் சுற்றுச்சூழல்,  அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளை சேர்ந்த விஞ்ஞானிகள் கலந்து கொண்டு  உரையாற்றுகின்றனர்.

  மாநாடு முடிந்ததும், ஆரோவில்லுக்கு சென்று பல்வேறு  பகுதிகளை பிரதிநிதிகள் பார்வையிடுகிறார்கள். இந்த மாநாட்டில் இந்தியா,  அமெரிக்கா, சீனா, துருக்கி, சுவீடன், தென்கொரியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ்,  பிரேசில், இந்தோனேசியா, ஐரோப்பிய யூனியன், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 75 பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.

மாநாட்டையொட்டி செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு  நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா நேற்று ஆய்வு  மேற்கொண்டார். நேற்று மதியம் புதுச்சேரிக்கு வந்த பிரதிநிதிகளை அவரும் மாவட்ட ஆட்சியர் வல்லவனும் விமான நிலையம் சென்று வரவேற்றனர். 

Related Stories: