பகலில் ‘சுள்’ இரவில் ‘ஜில்’கொடைக்கானலில் மாறுபட்ட வானிலை

கொடைக்கானல்: பகலில் ‘சுள்’ வெயிலும், இரவில் ‘ஜில்’ கடுங்குளிரும் நிலவுவதால், அதனை ரசிக்க சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலில் குவிந்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில், மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் வார இறுதி நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரிப்பது வழக்கம். தற்போது, குடியரசு தின தொடர் விடுமுறையை முன்னிட்டு நேற்று கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக குளிர் வாட்டி வதைத்தது. தற்போது பகல் நேரத்தில் ‘சுள்’ வெயிலும், இரவு நேரத்தில் செம ஜில்லான கடுங்குளிரும் நிலவி வருகிறது. இந்த மாறுபட்ட சூழலை  கொடைக்கானல் வந்த சுற்றுலாப் பயணிகள் ரசித்து செல்கின்றனர். மேலும் இந்த கடும் குளிர் காரணமாக கொடைக்கானலில் உள்ள பூங்காக்களில் பூக்கள் கருகி வருகின்றன. இதனால் சுற்றுலாப் பயணிகள் பூங்காக்களை ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

Related Stories: