தேமுதிக போட்டி ஏன்? வேட்பாளர் விளக்கம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் ஈரோட்டில் நேற்று அளித்த பேட்டியில், நாங்கள் பிரசாரத்தை தொடங்கி இருக்கிறோம். மக்கள் மத்தியில் விஜயகாந்த் மற்றும் தேமுதிகவுக்கு சிறந்த வரவேற்பு இருக்கிறது. வருகிற 1ம் தேதி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதற்கிடையே, நான் திமுகவிற்கு செல்வதாக தவறான செய்தி பரவுகிறது. இது உண்மைக்கு புறம்பானது. கிழக்கு தொகுதியில் ஏற்கனவே தேமுதிக வெற்றி பெற்று இருப்பதால் மக்களிடம் எங்களுக்கு செல்வாக்கு இருக்கிறது. அதிமுக 4 அணிகளாக பிரிந்து இருப்பதால், தேமுதிக  தனித்து போட்டியிடுகிறது. எனக்கு ஆதரவு தெரிவித்து விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்ய உள்ளனர் என்றார்.

Related Stories: