வறுமை ஒழிப்பு மற்றும் ஊரகக் கடன் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு, சிறப்புத் திட்டச் செயலாக்கம், வறுமை ஒழிப்பு மற்றும் ஊரகக் கடன் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று (28.01.2023) நடைபெற்றது.

 இக்கூட்டத்தில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் எங்களிடம் அடிக்கடி அறிவுரை கூறுவது என்னவென்றால் ஒருத்திட்டத்தை தொடங்கி வைப்பது மட்டும் அல்லாமல் முறையாக பயனாளிகளிடம் சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்பதாகும். அதன் அடிப்படையில் மாவட்டங்களுக்கு சுற்று பயணம் மேற்கொள்ளும் போது வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் நாமக்கல் மாவட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு, சிறப்புத் திட்டச் செயலாக்கம், வறுமை ஒழிப்பு மற்றும் ஊரகக் கடன் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்  நடைபெறுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் திட்டங்களை அறிவித்தாலும் அதனை முழு அளவில் செயல்படுத்திட அரசு அலுவலர்களின் ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாதது ஆகும். பள்ளிக்கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நடைபெற்று வரும் பணிகளை நிர்ணயிக்கப்பட்டுள்ள காலத்திற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பேசினார்.

இதனைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட / மண்டல அளவில் நடைபெறவுள்ளது. போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ / மாணவியர், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள்  ஆகிய  ஐந்து  பிரிவுகளில் ஆண் / பெண் இருபாலருக்கும் மாவட்ட அளவில் 42 வகையானப் போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என 50 வகையான போட்டிகளும்  நடைபெறவுள்ளது.

அதன்படி இன்றைய தினம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ஆய்வு கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் , நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் எ.கே.பி.சின்ராஜ், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமைச்செயலாளர்  முனைவர்.அதுல்யா மிஸ்ரா, இ.ஆ.ப.,

சிறப்பு செயலாக்கத் திட்டத்தின் அரசு சிறப்பு செயலர் எஸ்.நாகராஜன் இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் கா.ப.கார்த்திகேயன் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி. சிங்., இ.ஆ.ப., மாவட்ட கண்காணிப்பாளர் ச.கலைச்செல்வன் இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார் ஆகியோர் உள்ளனர்.

Related Stories: