பார்ட்டிக்கு அழைத்து சென்று மதுவை ஊற்றிக் கொடுத்து 13 வயது சிறுமி பலாத்காரம்: நண்பர்கள் இருவர் கைது

போபால்: மத்திய பிரதேசத்தில் 13 வயது சிறுமிக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த 2 நண்பர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மத்திய பிரதேச மாநிலம் போபால் அடுத்த கமலா நகரை சேர்ந்த 13 வயது சிறுமியை போதையில் பலாத்காரம் செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் (ஏடிசிபி) ஸ்ருத்கீர்த்தி சோம்வன்ஷி கூறுகையில்:

கடந்த சில தினங்களுக்கு முன் 13 வயது சிறுமி திடீரென காணவில்லை. அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குபதிந்து விசாரித்து வந்தோம். தொடர் விசாரணையில், அந்த சிறுமி தனது இரண்டு நண்பர்களுடன் ஒரு பார்ட்டிக்கு சென்றது தெரிய வந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர், அந்த சிறுமிக்கு மதுவை ஊற்றிக் கொடுத்துள்ளார். அதனை அருந்திய சிறுமி, போதையில் சுயநினைவை இழந்தார். அதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட இரண்டு பேரும், போதையில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும், அந்த சிறுமிக்கு அறிமுகம் ஆனவர்கள் தான் என்பதும் தெரியவந்தது’ என்று கூறினார்.

இச்சம்பவம் குறித்து மாநில மகிளா காங்கிரஸ் தலைவர் விபா படேல் கூறுகையில்:

மத்திய பிரதேசத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா ஆகியோர் தங்களது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். மகிளா காங்கிரஸ் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’ என்றார்.

Related Stories: