விமான நிலையத்தில் ரூ.95 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை: துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண் பயணி அணிந்திருந்த 2   ஷூக்களிலும் காலணி வடிவத்தில் தங்க தகடுகளை, கருப்பு கலர் டேப் ஒட்டி மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதில் 1.45 கிலோ தங்கம் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.67 லட்சம். இதை அடுத்து சுங்க அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்து, கடத்தல் பயணியை கைது செய்தனர்.  

இதேபோல்,  துபாயிலிருந்து பிளை துபாய் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை வந்த  2 ஆண் பயணிகள்  உடமைகளை சோதித்த போது, லேப்டாப் சார்ஜர்கள் எடுத்து வந்திருந்தனர். அந்த சார்ஜர் பின்கள் தங்கத்தால்  செய்யப்பட்டிருந்தன. அந்த பின்களில் இருந்த 560 கிராம்  தங்கத்தையும் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.28 லட்சம்.  இரண்டு துபாய் விமானங்களில்  ரூ. 95 லட்சம் மதிப்புடைய 2  கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து, 3 பயணிகளை கைது செய்தனர்.

Related Stories: