செல்போன் பறித்த 2 பேர் கைது

திருவொற்றியூர்: எர்ணாவூர் கன்னிலால் லே அவுட் பகுதியை சேர்ந்த ரயில்வே ஊழியர் ராஜேஷ் (50), நேற்று முன்தினம் எர்ணாவூர் மேம்பாலத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, அவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த 2 பேர், ராஜேஷ் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றனர். மாதவரம் தபால் பெட்டி தெருவை சேர்ந்த இன்ஜினியர் சமியுல்லா (49), வடசென்னை அனல் மின் நிலையத்தில் வேலை செய்து வருகிறார். இவர், பணி முடிந்து எர்ணாவூர் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, அவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த 2 பேர், சமியுல்லா செல்போனை பறித்து சென்றனர்.

இச்சம்பவம் குறித்து 2 பேரும் தனித்தனியாக எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார், சம்பவம் நடைபெற்ற இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த வசந்த் (23), டில்லிபாபு (27) ஆகிய 2 பேர் செல்போன் பறித்தது தெரிந்தது. அவர்களை நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: