புதுக்கோட்டை நாகுடி, மடங்குடி ஊராட்சி தலைவர்கள் பதவி நீக்கத்திற்கு இடைக்காலத் தடை விதித்தது ஐகோர்ட் கிளை..!!

மதுரை: புதுக்கோட்டை நாகுடி, மடங்குடி ஊராட்சி தலைவர்களை பதவிநீக்கம் செய்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிமன்ற இயக்குனர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து துறை இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பதவி நீக்கத்தை எதிர்த்து நாகுடி, மடங்குடி ஊராட்சி தலைவர்கள் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் கிளை ஆணையிட்டது.

Related Stories: