மறைந்த திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்னம் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

வேலூர்: மறைந்த திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். உடல்நலக்குறைவால் 93 வயதான ஜூடோ ரத்னம் உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். இவர் 1,200 படங்களுக்கு மேல் சண்டைப்பயிற்சி பயிற்சியாளராக பணியாற்றி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றவர் ஆவார்.

ஜூடோ ரத்னம் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். ரஜினியின் 46 படங்களுக்கு ஜூடோ ரத்னம் சண்டை இயக்குநராக பணியாற்றியுள்ளார். ஜூடோ ரத்னம் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் ரஜினிகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது;  

முரட்டுக்காளை ரயில் சண்டை உள்ளிட்ட எண்ணற்ற சண்டைக் காட்சிகள் மக்கள் மனதில் நிலைத்திருக்கும். சண்டைப் பயிற்சியில் தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கி அதில் வென்றவர் ஜூடோ ரத்னம் என ரஜினிகாந்த் கூறினார். ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்னம் நேற்று காலமான நிலையில் அவரது உடல் வடபழனியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.  ஜூடோ ரத்னம் உடல் அவர் சொந்த ஊரான குடியாத்தத்தில் இன்று நல்லடக்கம் செய்யபட உள்ளது.

Related Stories: