ஆஸ்திரேலியா ஓபன் தொடர் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் சானியா - போபண்ணா இணை தோல்வி

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா ஓபன் தொடர் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் சானியா-போபண்ணா இணை தோல்வி அடைந்தது. இறுதிப்போட்டியில் சானியா-போபண்ணா இணை 6-7 (2), 2-6 என்ற செட் கணக்கில் பிரேசிலின் லூயிசா ஸ்டெபானி மற்றும் ரஃபேல் மாடோஸுக்கு எதிராக தோல்வியடைந்தது. தனது இறுதி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் களமிறங்கிய சானியா மிர்சா தோல்வியுடன் வெளியேறினார்.

ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் பார்க்கில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இரட்டையர்க்கான கலப்பு பிரிவில் இந்திய வீரர்களான, சானியா மிர்சா மற்றும் ரோஹன் போபண்ணா கலந்து கொண்டது. இதின் முதல் சுற்றில், ஆஸ்திரேலியாவின் லூக் சவில்லே மற்றும் ஜெய்மி ஃபோர்லிஸ் ஜோடியை 2-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

அடுத்து உருகுவேயின் ஏரியல் பெஹர் மற்றும் ஜப்பானின் நினோமியா ஜோடிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 6-4, 7-6 என்ற புள்ளி கண்ணகில் அபாரமாக வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்நிலையில், காலிறுதியில் விளையாட இருந்த ஜெலேனா ஒஸ்டாபென்கோ-டேவிட் வேகா ஹெர்னாண்டஸ் ஜோடி வாக் ஓவர் கொடுத்து வெளியேறியதால் சானியா மிர்சா, ரோகன் போபண்ணா ஜோடி அரையிறுதிக்குள் நுழைந்தது.

இதையடுத்து பிரிட்டனின் நில் ஸ்குக்ஸ்கி அமெரிக்காவின் டெஸ்ரே மேரி மரி இணையை 7-6, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி சானியா மிர்சா - போபண்ணா இணை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் இறுதிப்போட்டியில் சானியா-போபண்ணா இணை 6-7 (2), 2-6 என்ற செட் கணக்கில் பிரேசிலின் லூயிசா ஸ்டெபானி மற்றும் ரஃபேல் மாடோஸுக்கு எதிராக தோல்வியடைந்தது. தனது இறுதி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் களமிறங்கிய சானியா மிர்சா தோல்வியுடன் வெளியேறினார்.

Related Stories: