தேனி - மதுரை சாலையில் மேம்பாலப் பணிக்காக 70 மரங்கள் அகற்றம்

தேனி: தேனி-மதுரை சாலையில் மேம்பாலம் கட்டுவதற்கு இடைஞ்சலாக இருந்த 70 மரங்கள் தேசிய நெடுஞ்சாலைத்துறையால் வெட்டி அகற்றப்பட்டது. தேனியில் இருந்து மதுரை செல்லும் சாலையில் ரயில்வே கிராசிங் உள்ளது. மதுரையில் இருந்து போடி வரையிலான பயணிகள் ரயில் திட்டத்தில் முதற்கட்டமாக, தற்போது தேனி வரை ரயில் சேவை துவக்கப்பட்டுள்ளது. வருகிற பிப். 19ம் தேதி முதல் போடியில் இருந்து மதுரை வழியாக சென்னை வரையிலான ரயில் போக்குவரத்து துவங்கப்பட உள்ளது.

இதன்காரணமாக ரயில் பயணிக்கும்போது ரயில்வே கேட் மூடப்படும் என்பதால் போக்குவரத்து இடையூறுவை தவிர்ப்பதற்காக ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் கட்ட தேசிய நெடுங்சாலைத் துறை முடிவு செய்தது. இதனையடுத்து, ரூ.70 கோடி மதிப்பீட்டில் மதுரை சாலையில் உள்ள மேரிமாதா மெட்ரிக் பள்ளி அருகில் இருந்து துவங்கி பங்களா மேடு அருகே தனியார் ஓட்டல் பகுதியில் கர்னல் ஜான் பென்னிகுக் நகர் திருப்பம் வரை சுமார் 1200 மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதனையடுத்து பாலம் கட்டப்படும் பகுதியில் இடைஞ்சலாக உள்ள 70 மரங்கள் அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இதனையடுத்து, தேனி நகர் பங்களாமேடு முதல் அரண்மனைப்புதூர் விலக்கு வரையிலான மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தும் பணி துரிதமாக நடந்து வருகிறது.

Related Stories: