பெண்கள் முன்னேற்றத்தை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் ஊர்தி குடியரசு தின அணி வகுப்பில் பங்கேற்பு

டெல்லி: தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றது. இந்தியாவின் பன்முக கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் குடியரசு தின விழாவில் அலங்கார ஊர்திகள் அணி வகுப்பு நடைபெற்றது. அந்தந்த மாநிலங்களின் பண்பாடு, கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு இருந்தது.

ஆந்திரா, அசாம், உத்தரகாண்ட், திரிபுரா, குஜராத், மேற்குவங்கம், மராட்டியம், உத்திரபிரதேசம் மாநில அலங்கார ஊர்திகள் வகுப்பில் பங்கேற்றது. பெண்கள் முன்னேற்றத்தை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் ஊர்தி குடியரசு தினவிழா அணிவகுப்பில் இடம்பெற்றது.

இதனை அடுத்து பல்வேறு போட்டிகளில் வென்றவர்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர். இதை தொடர்ந்து வந்தே பாரத் என்ற தலைப்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த கலை நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த குழுவினர் பங்கேற்றனர். 479 கலைஞர்கள் இந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதனை தொடர்ந்து ராணுவ வீரர்களின் மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதனை அடுத்தது விமான படையின் ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Related Stories: