அதானி குழும நிறுவனங்கள் வரவு - செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றசாட்டு

டெல்லி: அதானி குழும நிறுவனங்கள் வரவு - செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹிண்டன்பர்க் ரிசர்ச் எல்எல்சி என்ற ஆய்வு நிறுவனம் அதானி குழும நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு கூறியுள்ளது.

அதானி குழும நிருவனங்களின் செயல்பாடுகளை ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் 2 ஆண்டாக ஆய்வு செய்து குற்றசாட்டுகளை கூறியுள்ளது. பங்குசந்தையிலும் துணிகர முறைகேட்டில் ஈடுபட்டதன் மூலம் தம் நிறுவன பங்குகள் விலை அதிகரித்துள்ளதாக அதானி குழுமம் மீது புகார் எழுந்துள்ளது. அதானி குழும நிருவனங்களின் மீது கடுமையான மோசடி குற்றசாட்டுகள் கூறப்பட்டதையடுத்து அந்நிறுவன பங்குகள் விலை சார்ந்துள்ளன.   

பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அதானி குழும நிறுவனங்களில் இருந்து பணம் கையாடப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரீபியன் நாடுகள், மோரீஷியஸ், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் போலி நிறுவனங்களை அதானி நடத்துவதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் உலக பணக்காரர்கள் வரிசையில் 3ம் இடத்தில இருந்த கெளதம் அதானி தற்போது 4ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

Related Stories: