தமிழக கோயில்களில் அறங்காவலர்கள் நியமன வழக்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் இந்து தர்ம பரிஷித் அமைப்பை சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2011ம் ஆண்டு முதல் தமிழகத்தில் கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்படாமல் உள்ளது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து, அறங்காவலர் நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றும், அந்த பணி 6 மாதத்தில் முடிவடையும் எனவும், அறநிலையத் துறையின் கீழ் வரும் அனைத்து கோவில்களிலும் ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தனித்தனியாக டிரஸ்ட் போர்டு அமைப்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது என கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் குமணன் பதில் மனு தாக்க செய்திருந்தார். இந்த நிலையில் மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி போபண்ணா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, விசாரணை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: