ரூ.1.61 கோடி மோசடி செய்த மாஜி பாஜ பிரமுகர் கைது

சேலம்: சேலத்தை அடுத்த தாசநாயக்கன்பட்டி எஸ்.கே.சிட்டியை சேர்ந்தவர் கதிர்ராஜ் (31), ஜவுளித்தொழில் செய்து வருகிறார். இவர், மல்லூர் அருகே நிலவாரப்பட்டியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்காக முன்னாள் பாஜக பிரமுகரும், பில்டிங் காண்ட்ராக்டருமான சுரேந்திரனிடம் (33) ஒப்பந்தம் செய்து ரூ.1,61,54,347ஐ கொடுத்துள்ளார். ஆனால் அவர் நிலவாரப்பட்டியில் தனது மனைவி தீபா பெயரில் வீடு கட்டியுள்ளார். கதிர்ராஜ் புகாரின்படி மல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர். ரூ.1 கோடிக்கு மேல் மோசடி நடந்திருப்பதால், இவ்வழக்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க எஸ்பி உத்தரவிட்டார். இதனடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த மாதம் 14ம் தேதி, கதிர்ராஜியிடம் வீடு கட்டித்தருவதாக ரூ.1.61 கோடி மோசடி செய்ததாக சுரேந்திரன், தீபா மீது வழக்குப்பதிவு செய்தனர். மாஜி பாஜ பிரமுகர் சுரேந்திரனை நேற்று அதிரடியாக கைது செய்தனர். அவரது மனைவி தீபாவை தேடி வருகின்றனர்.

Related Stories: