'சமத்துவமின்மையை குறைக்க செல்வந்தர்களுக்கு 70% வரி அவசியம்': பொருளாதார அறிஞர் உலக நாடுகளுக்கு கோரிக்கை

டெல்லி: சமத்துவமின்மை இடைவெளியை குறைக்க பெரும் செல்வந்தர்களுக்கு கூடுதல் வரி விதிக்குமாறு 205 செல்வந்தர்கள் உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். கொரோனா பேரிடருக்கு பிறகு ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையிலான சமத்துவமின்மை இடைவெளி மிக வேகமாக அதிகரித்து வருகிறது. 3ல் இரண்டு பங்கு புதிய செல்வங்களை வெறும் 1 விழுக்காடு பணக்காரர்களே பெற்று வருகின்றனர் என சமீபத்திய ஆக்ஸ்வாம் ஆய்வு கூறுகிறது. உலக கோட்டீஸ்வரர்களுக்கு கூடுதலாக 5 விழுக்காடு வரி விதித்தாலே 200 கோடி மக்களை வறுமையின் கோரத்தில் இருந்து மீட்க முடியும் என்றும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

இத்தகைய சமத்துவமின்மையை குறைக்க பெரும் செல்வந்தர்களுக்கு அதிகபட்ச வரியாக 70 விழுக்காடு வரை விதிக்க வேண்டும் என நோபல் பரிசு பெற்ற பொருளதாக அறிஞர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் உலக நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளார். இதனை அபிகாயல் டிஸ்னி, ஹல்க் பட நடிகர் மார்க் ரப்பேலா உள்ளிட்ட 205 கோடீஸ்வரர்கள் வரவேற்று கூடுதல் வரி விதிக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தில் இதனை அவர்கள் முன்வைத்துள்ளனர். மிக கடுமையான வறுமையை போக்க உலக நாடுகள் இதுகுறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Stories: