சீட் பெல்ட் அணியாததற்கு மன்னிப்பு கேட்ட இங்கி. பிரதமர்

லண்டன்: இங்கிலாந்தில் கார் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாகும். முறையான மருத்துவ காரணங்களின்றி சீட் பெல்ட் அணியாதவர்களுக்கு அந்நாட்டில் ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக், வடமேற்கு இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டிருந்த போது, விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள 100 நலத்திட்டங்கள் பற்றிய வீடியோவை பதிவு செய்வதற்காக, காரின் சீட் பெல்ட்டை கழற்றி இருந்தார். இந்த வீடியோ வைரலானதில் பிரதமரின் நடவடிக்கை குறித்து மக்கள் கேள்வி எழுப்பினர். இது குறித்து பிரதமரின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ``சிறிய வீடியோ ஒன்றுக்காக பிரதமர் சீட் பெல்ட் அணியவில்லை. இது முற்றிலும் தனது தவறு என்பதை ஒப்புக் கொண்டார். இந்த சிறிய தவறுக்காக அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்,’’ என தெரிவித்தார்.

Related Stories: