குடிநீரில் மலம் கலந்த விவகாரம்: 30 பேரிடம் சிபிசிஐடி விசாரணை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் தலித் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் வழங்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது கடந்த டிசம்பர் 26ம் தேதி தெரியவந்தது. இதுதொடர்பாக வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதைதொடர்ந்து ஏஎஸ்பி தலைமையில் 11 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக்குழுவும் அமைக்கப்பட்டது. 85 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது.

இதனால் இதுவரை நடந்த விசாரணை அறிக்கை கடந்த ஜனவரி 16ம் தேதி சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அன்று முதலே விசாரணையை துவங்கி விட்டதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் 36 பேரை கொண்ட சிபிசிஐடி போலீசார், வேங்கைவயல் மற்றும் இறையூர் கிராமங்களில் கடந்த 3 நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை வரை 30 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

Related Stories: