சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தடையை மீறி 2 கிராமங்களில் வங்காநரி ஜல்லிக்கட்டு போட்டி..!!

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தடையை மீறி 2 கிராமங்களில் வங்காநரி ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது. கொட்டவாடி கிராமத்தில் 200 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக நடைபெறும்  வங்காநரி ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது முக்கிய வீதிகள் வழியாக வங்காநரியை ஊர்வலமாக எடுத்து வந்து மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி தெருவில் ஓடவிட்டனர்.

தகவலின் பேரின் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், வீதியில் ஓடிய வங்காநரியை மீட்டு வனப்பகுதியில் விட்டனர். இதேபோல வனத்துறையினர் எச்சரிக்கையை மீறி சின்னமநாயக்கன் பாளையத்திலும் வங்காநரி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. வங்காநரி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தினால் மழை நன்றாக பெய்யும், ஊர் செழிக்கும் என்பது சுற்றுவட்டார ஊர் மக்களின் நம்பிக்கையாகும்.

Related Stories: