வருமான வரி தொகையை திரும்ப பெற்றதில் முறைகேடு 18 கடற்படை அதிகாரிகள் உட்பட 31 பேர் மீது சிபிஐ வழக்கு

புதுடெல்லி: பொய்யான விலக்குகளை கூறி வருமான வரித்தொகையை திரும்ப பெற்ற புகாரில் 18 கடற்படை அதிகாரிகள் உட்பட மொத்தம் 31 பேர் சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். கேரளாவில் முதன்மை தலைமை வருமான வரி ஆணையர் வருமான வரி திரும்ப பெறுவதில் முறைகேடு நடந்துள்ளதாக சிபிஐ அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரில் மொத்தம் 51 பேர் பொய்யான விலக்குகளை காரணங்களாக கூறி வருமான வரித்தொகையை திரும்ப பெற்றுள்ளனர். இது குறித்து அவர்களுக்கு வருமான வரித்துறை மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த நோட்டீசின் அடிப்படையில் தாங்கள் திரும்ப பெறுவதில் தவறு செய்துவிட்டதாக கூறி 20 தனிநபர்கள் தாங்கள் திரும்ப பெற்ற வருமான வரித்தொகை ரூ.24.62லட்சத்தை மீண்டும் அலுவலகத்தில் செலுத்திவிட்டனர். மீதமுள்ள 31 நபர்கள் தாங்கள் பெற்ற ரூ.44.07லட்சத்தை திரும்ப செலுத்தவில்லை. கடற்படை மற்றும் போலீஸ், இரண்டு தனியார் நிறுவனங்களின் நிர்வாகிகள், ஐடி மற்றும் லைன் இன்சுரன்ஸ் வழங்குபவர்கள் முகவர்களின் சேவையை பயன்படுத்தி பொய்யான விலக்குகளை கூறி வருமான வரித்ெதாகையை திரும்ப பெற்றுள்ளனர். புகாரின் அடிப்படையில் கடற்படையை சேர்ந்த 18 அதிகாரிகள் உட்பட 31 பேர் மீதும் சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: