லாஸ் ஏஞ்சல்ஸ்: சமீபத்தில் ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றது. இந்நிலையில், பிரபல இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தை இரண்டு முறை பார்த்துள்ளதாக ராஜமவுலி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ஜேம்ஸ் கேமரூன் - ராஜமவுலி சமீபத்தில் அமெரிக்காவில் சந்தித்தனர். இதையடுத்து டிவிட்டரில், ‘இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தை பார்த்துள்ளார். படத்தை அவர் மிகவும் விரும்பியதால் தனது மனைவி சுசிக்கு பரிந்துரைத்து மீண்டும் ஒருமுறை பார்த்துள்ளார்.
