பொங்கல் பண்டிகைக்காக தயாராகும் மண்பானைகள்: தமிழ்நாடு முழுவதும் விற்பனைக்காக அனுப்பி வைப்பு

மதுரை: பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் நிலையில் அது சார்ந்த பானை, மஞ்சள் உள்ளிட்டவற்றின் விற்பனையும் சூடு பிடித்துள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை  அடுத்த வலையன்குளத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இங்கு தயாராகும் மண்பானைகள் நெல்லை, ராமநாதபுரம், கோவை , திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. தற்போது பொங்கலுக்கு பானைகள் தயாரிப்பு பணிகள் இரவு பகல் பாராமல் நடைபெற்று வருகின்றன.

மண்பானைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் அதனை தயாரிக்க பயன்படும் களிமண் கிடைப்பது தட்டுப்பாடு உள்ளதாகவும். தடையின்றி களிமண் கிடைக்க அரசு உதவ வேண்டும் என்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொங்கல் பண்டிகையில் மண்பானைகளுக்கு அடுத்த படியாக மஞ்சளுக்கு முக்கிய இடம் உண்டு. பொங்கலை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களுக்கு முன்னரே நூற்றுக்கணக்கான ஏக்கரில் மஞ்சள் பயிரிட்ட விவசாயிகள் தற்போது அறுவடை தொடங்கியுள்ளனர்.

வரும் ஆண்டுகளில் பொங்கல் பரிசு தொகுப்பில் மஞ்சள் குலையையும் சேர்க்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. கடந்த ஆண்டு ஒரு மஞ்சள் குலை ரூ.30க்கு விற்கப்பட்டது. தற்போது விளைச்சல் நன்றாக உள்ள நிலையில் ரூ.40 முதல் ரூ.60 வரை விற்பனையாகும் என எதிர்பார்ப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: