பெங்களூருவில் பரிதாபம் மெட்ரோ ரயில் தூண் சாய்ந்து தாய்-மகன் பலி: தந்தை, மகள் படுகாயம்

பெங்களூரு: பெங்களூருவில் மெட்ரோ ரயில் தூண் சாய்ந்து சாலையில சென்ற பைக் மீது விழுந்ததில் தாய்- மகன் பலியானார்கள். பைக் ஓட்டிய தந்தையும், மகள் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெங்களூரு எச்.பி.ஆர். லே அவுட் அருகில் நாகவார பகுதியில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக என்சிசி நிறுவனம் அமைத்திருந்த 40 அடி உயர இரும்பு கம்பி தூண் நேற்று காலை எதிர்பாராதவிதமாக சாலையில் சாய்ந்து விழுந்தது. அப்போது, அந்த வழியாக சாலையில் சென்ற பைக் மீது விழுந்தது. இதில் பைக்கில் பயணம் செய்த லோகித்குமார், அவரது மனைவி தேஜஸ்வினி(28), இரண்டரை வயது மகன் விஹான் மற்றும் மகள் ஆகியோர் படுகாயம்  அடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் நான்கு பேரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் தேஜஸ்வினி மற்றும் அவரது மகன் விஹான் ஆகிய  இருவரும் உயிரிழந்தனர். லோகித்குமார் மற்றும் அவரது மகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Related Stories: