தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: ஆர்.என்.ரவியை திரும்பப் பெற ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தல்

கோவை: ஆளுநரை கண்டித்து கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் பெரும் மோதல் ஏற்பட்டு வருகிறது. ஆளுநரை பொறுத்தவரை தமிழ்நாடு என்று சொல்லாமல் தமிழகம் என்று சொல்லி மறுத்து வருகிறார். இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டில்  பெரியார், அம்பேத்கர் மற்றும் திராவிட சிந்தனையாளர்கள் தொடர்ந்து ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு தமிழ்நாடகாத்தான் இருக்க வேண்டும், அதை அப்படித்தான் அழைக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு தனித்துவமான நாடு என்றும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலை ஆளுநர்  சொல்லக்கூடிய கருத்துக்கு தொடர்ந்து பல்வேறு எதிர்ப்புகளும் திரண்டு வருகின்றன. நேற்றைய தினத்தில் சட்டமன்றத்தில் சில முக்கியமான வார்த்தைகளை சொல்லாமலே ஆளுநர் வெளிநடப்பு செய்திருக்கிறார்.

இதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்திற்கு விரோதமான போக்கை ஆளுநர் கடைப்பிடிக்கிறார் என்றும் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் முழுவதும் தொடர்ந்து ஆளுநருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

ஆளுநரை எதிர்த்து புதுச்சேரியிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரி மாநில தந்த பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தமிழர்களின் உணர்வுக்கு எதிராக தமிழ்நாடு ஆளுநர் ரவி செயல்படுகிறார். தமிழர்களுக்கு எதிராக பேசி வரும் தம்னிழ்நாடு ஆளூநர் ரவியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர். அப்போது ஆளுநர் ரவியின் போட்டாவை கிழித்தும், செருப்பால் அடித்தும், எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

Related Stories: