புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் நீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் 20 பேர் ஆஜராக சம்மன்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியல் இனமக்கள் வசிக்கும் பகுதியில் நீர்தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் வேங்கைவயல் சேர்ந்த 20 பேர் மாலை 5 மணிக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஏடிஎஸ்பி ரமேஷ்கிருஷ்ணன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு முன் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர். ஏற்கனவே 70 பேரிடம் வாக்குமூலம் 70பேரிடம் பெற்ற நிலையில் 20 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குகள் பதிந்துள்ளனர். இந்த நிலையில் அந்த பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு மாற்று ஏற்பாடாக வேறொரு மேல்நிலைத் தொட்டியில் இருந்து தண்ணீர் விநியோகிக்க மாவட்ட நிர்வாகம் புதிய குழாய்கள் பதிக்கும் ஏற்பாடுகளை செய்தது.

இந்த சூழலில் மாற்று குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்கும் பணியை கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை தொடங்கி வைத்தார். பின்னர் குறிப்பிட்ட கிராமத்தில் தனியார் அமைப்பின் சார்பில் தோல்நோய் சிறப்பு மருத்துவ முகாமும் நடைபெற்றது. இதில் 50 பேர் பங்கேற்றனர். மனித கழிவு கலக்கப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி இடிக்கப்பட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு அதிலிருந்து அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட இருக்கிறது இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியல் இனமக்கள் வசிக்கும் பகுதியில் நீர்தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் வேங்கைவயல் சேர்ந்த 20 பேர் மாலை 5 மணிக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories: