கும்பகோணம் தாலுகாவிற்கு 1 லட்சத்து 8 ஆயிரம் கரும்புகள்-வயல்களில் கரும்பு வெட்டும் பணிகள் மும்முரம்

கும்பகோணம் : தமிழ்நாடு அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் சிறப்பு தொகுப்பாக ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு செங்கரும்பு மற்றும் ரூபாய் ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை இன்று (9ம் தேதி) முதல் வழங்கப்பட உள்ளது.இந்நிலையில் கும்பகோணம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் 1 லட்சத்து 8 ஆயிரம் கரும்புகள் பயனாளிகளுக்கு வழங்க உள்ளது.

அதற்கான கொள்முதல் பணிகள் தொடங்கிய நிலையில், கும்பகோணம் அருகே தேவனாஞ்சேரி பகுதியில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் கரும்பு வெட்டும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கான கண்காணிப்பு பணிகளில் கும்பகோணம் வேளாண் துணை அலுவலர் சாரதி, கூட்டுறவுத்துறை களப்பணியாளர் சிவக்குமார் ஆகியோர் ஈடுபட்டனர்.

Related Stories: