கோவை: டி.வி நிகழ்ச்சியில் நடனமாடி பிரபலமான சாய் பல்லவி, பிறகு ஜார்ஜியா நாட்டில் இதய நோய் நிபுணருக்கான மருத்துவ பட்டத்தை பெற்றார். பிறகு மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய ‘பிரேமம்’ படத்தில் மலர் டீச்சராக நடித்து புகழ்பெற்ற அவர், தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடிக்கிறார். இந்நிலையில், பாரம்பரிய படுகர் இன உடையில் தோன்றி அசத்திய சாய் பல்லவி யின் போட்டோக்கள் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் படுகர் இன மக்கள், தங்களுடைய மூதாதையரான ‘ஹெத்தையம்மனை’ குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். பெண் தெய்வமான ஹெத்தையம்மனின் மூல ஸ்தலம், கோத்தகிரி அருகிலுள்ள பேரகணியில் இருக்கிறது.