முதல்வர் நிதிஷ்குமார் தொடங்கி வைத்தார் பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடக்கம்: 2 கட்டங்களாக நடக்கிறது

பாட்னா: பீகாரில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியை அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் தொடங்கி வைத்தார். பீகாரில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென நீண்டகாலமாக கோரிக்கை இருந்து வருகிறது. இதற்காக அம்மாநில சட்டப்பேரவையில் கடந்த 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பு பணியை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாட்னாவில் நேற்று தொடங்கி வைத்தார்.  இந்த கணக்கெடுப்பு பணிக்காக பீகார் அரசு ரூ.500 கோடியை ஒதுக்கி உள்ளது.

இதன்படி, சாதிவாரி கணக்கெடுப்பு பணி 2 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. வரும் 21ம் தேதி வரை நடக்கும் முதல் கட்ட பணியில், அனைத்து குடும்பங்களின் எண்ணிக்கை கணக்கிடப்படும். அதைத் தொடர்ந்து மார்ச்சில் நடக்கும் 2ம் கட்ட கணக்கெடுப்பு பணியில், அனைத்து மக்களின் சாதி, உட்பிரிவு, மதம் மற்றும் அவர்களின் பொருளாதார நிலை குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன. இந்த கணக்கெடுப்பு பணிக்காக மொபைல் செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதில் பல்வேறு கேள்விகள் இடம் பெற்றுள்ளதாகவும் அந்த கேள்விகள் கேட்கப்பட்டு விவரங்கள் டிஜிட்டல் வடிவில் சேகரிக்கப்படும். இந்த கணக்கெடுப்பு பணி வரும் மே மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories: