வெளிநாட்டு போதை பொருள் குற்றவாளிகள் தமிழகத்திற்குள் வந்துவிட்டார்கள் என்றால் கட்டாயம் கைது செய்வோம்: டிஜிபி சைலேந்திரபாபு தகவல்

சென்னை: சென்னை மாநகர காவல்துறையில் புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் இயங்கி வரும் காவலர் பல்பொருள் அங்காடியில், காவலர்கள் மற்றும் காவலர்கள் குடும்பத்தினர் பயன்பாட்டிற்கு புதிதாக அமைக்கப்பட்ட மின்தூக்கியின் இயக்கத்தை இன்று காலை தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு டிஜிபி சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த ஓராண்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டுள்ளது. சாதி கலவரமோ அல்லது மதக்கலவரமோ ஒரு தனிப்பட்ட பிரிவை சேர்ந்தவர்களை குறிவைத்து தாக்கிய அவர்களை கொலை செய்த சம்பவங்கள் போன்று எதுவும் இல்லை. தமிழக காவல்துறையில் பணியாற்றக்கூடிய அனைத்து அதிகாரிகள், அனைத்து காவலர்கள் என அனைவரின் அர்ப்பணிப்பும் மற்றும் பணியின் மூலமாக தமிழகத்தில் அமைதி நிலவி கொண்டு இருக்கிறது.

போதை கடத்தல் பொருத்தமட்டில் தமிழக காவல்துறை மிகவும் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் வெளிநாட்டு குற்றவாளிகள் வந்து இருந்தார்கள் என்றால், அதுவும் வந்துள்ளார்கள் என்று நிரந்தரமான ஒரு ஆதாரங்கள் இல்லை. இருந்தாலும் போதை பொருள் கடத்தல் குற்றவாளிகள் தமிழகத்திற்குள் வந்து விட்டார்கள் என்றால் அவர்களை நாங்கள் கைது செய்வோம். எல்லா சந்தேக நபர்களையும் கண்காணித்து இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: