புனே: மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஜன் ஜகார் யாத்திரை பிரசாரத்தை கட்சியின் தலைவர் சரத் பவார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அப்போது பேசிய சரத்பவார், ‘‘ அதிகாரத்தில் இருப்பவர்கள் விவசாயிகளுக்கு உரிய பலனை வழங்குவதற்கு தயாராக இல்லை. அவர்கள் இடைத்தரகர்களின் நலன்களை பாதுகாத்து சாதாரண மக்களை பணவீக்க பள்ளத்தில் தள்ளுகின்றனர்.
