ஆமாம்... ஒரு காலத்தில் நான் ‘ப்ளே பாய்’: பாக். மாஜி பிரதமர் இம்ரான் கான் ஆவேசம்

லாகூர்: ஓய்வுபெற்ற ராணுவ தளபதி கமர் ஜாவேத் பஜ்வா, என்னை ‘ப்ளே பாய்’ என்று அழைத்தார். அதற்கு நான் ஆமாம் என்று பதில் கூறினேன் என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவருமான இம்ரான் கான், லாகூரில் நிருபர்களிடம் கூறுகையில், ‘என்னைப் பற்றி ஆபாச ஆடியோக்கள், வீடியோக்கள் வெளியாகின்றன. இதன் மூலம் நமது நாட்டு இளைஞர்களுக்கு என்ன செய்தியை சொல்ல வருகிறோம்? ஓய்வுபெற்ற ராணுவ தளபதி கமர் ஜாவேத் பஜ்வா, என்னை ‘ப்ளே பாய்’ என்று கூறினார்.

அப்போது நான் அவரிடம் சொன்னேன், ‘ஆமாம் நான் கடந்த காலத்தில் ப்ளே பாய் ஆக இருந்தேன்; அதற்காக நான் என்னை ஒருபோதும் தேவதூதன் என்று கூறவில்லை. முன்னாள் ராணுவ தளபதி, ‘டபுள் கேம்’ விளையாடுகிறார் என்பதை அறிந்து கொண்டேன். அவர் அரசியல் ரீதியாக என்னை முதுகில் குத்தினார். ஷேபாஸ் ஷெரீப்பை பிரதமராக்குங்கள் என்று கூறினார். ஜெனரல் பஜ்வாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கியது எனது மிகப்பெரிய தவறு. பதவி நீட்டிப்புக்குப் பிறகு அவர் தனது உண்மையான முகத்தை காட்டிவிட்டார். எனது அரசுக்கு எதிராக அவர் சதி செய்தார்’ என்று பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.

Related Stories: