சென்னை விமான நிலையத்தில் உள்ள பொம்மை கடைகளில் பி.ஐ.எஸ் அதிகாரிகள் அதிரடி சோதனை: ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத 327 பொம்மைகள் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் தரம் இல்லாத 327 பொம்மைகளை பி.ஐ.எஸ். அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விமான நிலையத்தில் உள்ள பொம்மை கடைகளில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் தரமில்லாத பொம்மைகள் சிக்கின. இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை அதிகாரிகள் நேற்று சென்னை விமான நிலையத்தில் சோதனை செய்தனர். சோதனையின் போது பிஐஎஸ் ஹால்மார்க் இல்லாத 327 பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை விமானநிலையத்தில் உள்ள தனியார் பொம்மை கடையில் அதிரடியாக பி.ஐ.எஸ் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்திய தர நிர்ணயம் எனப்படும் சென்னை கிளை சேர்ந்த அதிகாரிகள் தான் சோதனை மேற்கொண்டனர். உள்நாட்டு விமான நிலையத்தில் உள்ள தனியார் கடையில் சோதனை நடத்தினார்கள் TIARA TOY ZONE எனப்படும் நிறுவனம் தொடர்பான கடையில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 327 பொம்மைகள் தரமில்லாத பொம்மைகள் என தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

குறிப்பாக 2016-ம் ஆண்டு சட்டப்பிரிவின் படி  பி.ஐ.எஸ்-யின் ஸ்டாண்டர்டு மார்க் ஆன ஐஎஸ்ஐ குறியீடு பொம்மைகளுக்கு வழங்கப்பட வேண்டும். குறிப்பாக இறக்குமதி செய்யப்பட்டிருந்தாலும், தயாரிக்கப்பட்டிருந்தாலும் அவ்வாறு வைத்திருக்கும் பொம்மை என்பது குழந்தைகள் பயன்படுத்தும் அளவிற்கு தரத்தில் தயாரிக்கப்பட்டிருக்கிறதா என்ற அடிப்படையில் பி.ஐ.எஸ் அதிகாரிகள் கண்காணித்து இந்த ஐஎஸ்ஐ முத்திரை வழங்கப்படுகிறது. அந்த முத்திரை இல்லாத பொம்மைகள் குழந்தைகள் பயன்படுத்தினால் அவர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று அதுபோன்ற பொம்மைகள் விற்கப்படுவதற்கு தடை என்பது பிஐஎஸ் அதிகாரிகளால் விதிக்கப்பட்டிருந்தது.

அதையும் மீறி சில கடைகளில் இது போன்ற பொம்மைகள் விற்கப்படுவதை அறிந்து இதுபோன்ற சோதனைகளை பிஐஎஸ் அதிகாரிகள் மேற்கொள்வார்கள் அதன் அடிப்படையில் தான் விமான நிலையத்தில் 198 மின்சார பொம்மைகளும்  அதே நேரத்தில் 129  ரிமோட் பொம்மைகளும் தரம் இல்லாத அடைப்படையில் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இது போன்ற தரமில்லாத பொம்மைகளை விற்பனை செய்யும் நிறுவனம் மீது சிறை தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் வழங்கப்படும் என்று பி.ஐ.எஸ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: