சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி.பி பொன் மாணிக்கவேல் கைது செய்ய தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கமுடியாது: உச்சநீதிமன்றம்

டெல்லி: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி.பி பொன் மாணிக்கவேல் கைது செய்ய தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கமுடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஐ.ஜி.பி பொன் மாணிக்கவேல் மீது உள்ள குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ. விசிரிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்ததை எதிர்த்து பொன்மணிக்கவேல் தொடர்ந்து வழக்கு உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சி.பி.ஏ. மற்றும் காதர் பாஷா ஆகியோர் தாக்கல் செய்த பதில் மனு அளிக்க பொன்மணிகவேல் உத்தரவிட்டு, விசாரணை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைக்க பட்டு இருந்தது. அப்போது பொன்மாணிக்கவேல் சார்பில் ஆஜரான முத்தவழக்கறிஞர் இந்த வழக்கின் விசாரணை இடைப்பட்ட காலத்தில் பொன்மாணிக்கவேலை கைது செய்ய கூடாது என உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என கூறி கோரிக்கை வைத்தார்.

இடைக்காலக் உத்தரவோ, நிவாரணமானமோ வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து பொன்மாணிக்கவேல் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது சரியா, என்பதை விசாரிப்போம் என்றும் தெரிவித்து, மேலும் விசாரணையை ஜனவரி 16-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். இந்த விவகாரத்தில், பொன் மாணிக்கவேலுவின் கீழ் பணிபுரிந்த தமிழ்ச்செல்வன் தாக்கல் செய்த இடையீ்ட்டு மனுவையும் விசாரிப்பதாக தெரிவித்தனர்.

  

Related Stories: